மதுரை சித்திரை திருவிழா நிறைவு : பூப்பல்லக்கில் கள்ளழகர்
ADDED :2056 days ago
மதுரை: மதுரை அழகர்கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவில், பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
கொரோனா எதிரொலியாக உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆகம விதிப்படி, அழகர்கோவில் வளாகத்தில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோயில் வளாகத்தில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட தாமரை தடாகத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம், மண்டூக முனிவருக்கு மோட்சம் தரும் நிகழ்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, சித்திரை திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அழகர் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் www.tnhrce.gov.in, youtube மூலமாக பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே தரிசனம் செய்தனர்.