மாரியம்மன் கோவிலில் வைகாசி சிறப்பு பூஜை
ADDED :1973 days ago
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்து, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, திருவிழா நடத்த முடியவில்லை. இதனால் சிறப்பு நிகழ்ச்சிகள் தள்ளிபோடப்பட்டது. இந்நிலையில், வைகாசி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பூஜை நடந்தது.