சக்தி மிக்க சாளரக் கோயில்
ADDED :2321 days ago
சில கோயில்களில் கருவறைக்கு நேரே செல்ல முடியாமல் குறுக்கே பலகணி எனப்படும் கல்ஜன்னல் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றை ‘சாளரக் கோயில்’ என்பர். இத்தகைய கோயில்களில் அக்னி சக்தி வாய்ந்த தெய்வங்கள் மூலவராக இருப்பர். இங்கு ேஹாமம், சாம்பிராணி துாபம், தீபமிடுவது அளப்பரிய சக்தி தரும். சன்னதிக்கு நேராக நின்று வழிபட்டால், அதன் ஆற்றலை நம் உடம்பு தாங்காது என்பதால், இப்படி பலகணி அமைக்கப்படும். ஸ்ரீசக்ரத்துக்கு இணையானது இப்பலகணி. கருவறையில் வெளிப்படும் அருட்சக்தியை உள்வாங்கி, பக்தர்களின் பக்குவத்திற்கு ஏற்ப பலகணி ஆற்றலை வழங்கும். .கடலுார் அருகிலுள்ள நல்லாத்துார் சுவர்ணபுரீஸ்வரர் கோயில் சாளர அமைப்புடையது. இங்குள்ள மூலவர் அக்னிசக்தி மிக்கவர்.