மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1957 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1957 days ago
சென்னை : கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நேர்மையான வாடகைதாரர்களுக்கு, வாடகை செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, தொழில், வருமானம் இழந்து, ஏராளமான நடுத்தர, கீழ்தட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இரண்டு மாதங்களாக வாடகை கொடுக்காததால், பலர் வீட்டை காலி செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.வாடகை வீடுகளில் குடியிருப்போர், வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை, அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றனர்.அதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகை தொகையை, இரண்டு மாதங்கள் கழித்து பெற்று கொள்ள வேண்டும் என, வீட்டு உரிமையாளர்களுக்கு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால், கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு, வாடகை செலுத்துவதற்கான சலுகை அறிவிக்கப்படவில்லை. இது குறித்து, சமூக நல விரும்பிகள் கூறியதாவது: தனியார் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர், இரண்டு மாதங்கள் கழித்து வாடகை செலுத்தலாம் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அறநிலையத்துறை கட்டடங்களில், பல்லாயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கான வாடகை செலுத்தும் சலுகை, இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எனவே, இதுவரை நேர்மை தவறாமல், உரிய காலகட்டத்தில் வாடகை செலுத்தி வரும் குடியிருப்பு வாசிகள் பலர், ஊரடங்கால் வருமானம் இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்காவது வாடகை செலுத்துவதில், சலுகை காட்ட வேண்டும். இதுதொடர்பாக, அறநிலையத்துறை உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
1957 days ago
1957 days ago