திருத்தணி தணிகாசலம்மனுக்கு 108 இளநீர் அபிஷேகம்
ADDED :1953 days ago
திருத்தணி: அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி, தணிகாசலம்மன் கோவிலில், 108 இளநீர் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நேற்று நடந்தன. திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள
தணிகாசலம்மன் கோவிலில், அக்னி நட்சத்திரம் நேற்று நிறைவடைந்ததை தொட ர்ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், மூலவர் அம்மனுக்கு, 108 இளநீர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இந்த அபிஷேகத்தில் கோவில் குருக்கள் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.