உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டு தலங்களை திறக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வழிபாட்டு தலங்களை திறக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

புதுச்சேரி; வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா ஊரடங்கினை தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாதங்களாக வழிபாட்டுதலங்களில் ஊடரங்கு உத்தரவினை கடைபிடித்து வருகின்றனர். அனைவரும் வீட்டில் இருந்தபடி இறைவனை வணங்கி வருகின்றனர்.நாளை 31ம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவு பெறுகிறது. இச்சூழ்நிலையில் சமூக இடைவெளி கடைபிடித்து முககவசம் அணிந்து வழிபாட்டுதலங்களுக்கு செல்ல பொதுமக்கள் விரும்புகின்றனர்.எனவே ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் செய்திட மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !