கோயில்களை திறக்க நுாதன போராட்டம்
ADDED :1998 days ago
வடமதுரை: தமிழகத்தில் கோயில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சியினர் வடமதுரையில் நுாதன போராட்டம் நடத்தினர். பஸ் நிலையம் அருகில் கூடிய அக்கட்சியினர் வேப்பிலை மாலை அணிந்து பால்குடங்களுடன் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றனர். காளியம்மன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் அங்கு கோயில் பீடத்தில் ஊற்றினர்.