உலக நன்மை வேண்டி சிறப்பு அபிஷேகம்
ADDED :2308 days ago
நெட்டப்பாக்கம்; கோர்க்காடு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.கரிக்கலாம்பாக்கம் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், கொரனோவில் இருந்து மக்கள் விடுபடவும், நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதையொட்டி காலை 7.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 9.00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் செய்திருந்தார்.