கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் உதவிக்கரம்
ADDED :2054 days ago
சூலூர்: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கிராமக்கோவில் பூஜாரிகள், பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், உதவிகள் வழங்கப்பட்டது.
ஊரடங்கால், அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இல்லாமல், தினசரி பூஜைகள் மட்டுமே நடக்கின்றன. இதனால், வருமானம் இன்றி அர்ச்சகர்கள், பூஜாரிகள், பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். சின்னியம்பாளையம் ஊராட்சி, பாலமுருகன் கிருத்திகை ஃபண்ட் காவடி குழு சார்பில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க முடிவானது. ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி தேவராஜன், துணைத்தலைவர் ஜோதி மற்றும் காவடி குழு உறுப்பினர்கள், பூஜாரிகளுக்கு உணவு பொருட்கள் தொகுப்புகளை வழங்கினர்.