கோயில்களை திறக்க ஒற்றைக் காலில் நின்று போராட்டம்
ADDED :1950 days ago
கூடலூர்: கோயில்களை திறக்கக்கோரி கூடலூரில் இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்னை செய்யும் போராட்டம் நடந்தது.
கூடலழகிய பெருமாள் கோயில் முன்பு, நகர தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருப்பூர், வீரராகவப் பெருமாள் கோவில் முன் தமிழக கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஒற்றைக் காலில் நின்று ஆர்ப்பாட்டம் நடந்தது.