இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதி
ADDED :1993 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் பக்தர்கள் கைகால்களை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று(12ம் தேதி) உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேவஸ்தான பணியாளர்களுக்கு கை கால்களை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து காக்க கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.