சூரியகிரகணம்: பழநியில் சம்ப்ரோஷன பூஜை
ADDED :1941 days ago
பழநி:சூரிய கிரகணத்தை முன்னிட்டு பழநி கோயிலில் பூஜை நேரம் மாற்றப் பட்டுள்ளது.
ஊரடங்கால் பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நித்யபூஜைகள் மட்டும் நடக்கிறது. இன்று சூரிய கிரகண நிகழ்வு நடைபெற்றது.. காலை 6.00 மணிக்கு நடை திறந்து விஸ்வரூபதரிசனம், 6:30 விளா பூஜை 6.10 மணிக்கும், 8:00 மணிக்கு நடைபெறும் சிறுகால சந்தி பூஜை காலை 6:50க்கும் காலை 9:00 மணிக்கு நடைபெறும் காலசந்தி முன்னதாக 7.00 மணிக்கும் நடைபெற்றது. பூஜைகள் நிறைவடைந்த பின் அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். கிரகணம் நிறைவடைந்த பின் பகல் 2.00 மணிக்கு கலசம் ஸ்தாபித்து சம்ப்ரோஷன பூஜை, பின் (பகல் 12 மணிக்குரிய) உச்சிகாலபூஜை நடைபெற்றது. இந்த பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, என கோயில் நிர்வாகம்தெரிவித்துள்ளது.