திருப்போரூர் பெருமாள் கோவிலில் திருப்பணி துவக்கம்
ADDED :1938 days ago
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில், ஹிந்து அறநிலையத் துறை நிர்வகிக்கும், பழமையான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலை சீரமைக்க, கிராம மக்கள் முடிவெடுத்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில், இப்பகுதி சமூக ஆர்வலர் ஜெயச்சந்திரன் மற்றும் கல்வியாளரும், ஆன்மிக நபருமான ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், சூரிய கிரகணமான நேற்று, கோவில் திருப்பணியை துவக்கியுள்ளனர். கோவிலைச் சுற்றி பக்தர்கள் நடக்க பாதையும், மலர் செடிகள் நடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.