உடுமலை திருப்பதியில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :1931 days ago
உடுமலை : உடுமலை, திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலையில், யாக குண்டம் அமைத்து, பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வேங்டேச பெருமாள் எழுந்தருளினார். கொரோனா ஊரடங்கு காரணமாக, பட்டாச்சார்யார்கள் மட்டும் பங்கேற்றனர்.