தர்மபுரி விநாயகர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு
ADDED :1931 days ago
தர்மபுரி: சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தவ. 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், நெசவாளர் காலனி சக்திவிநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.