தியாகதுருகம் சிவன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
ADDED :1977 days ago
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் உள்ள சிவன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தியாகதுருகம் சந்தை மேட்டில் பாகம்பிரியாள் உடனுறை நஞ்சுண்ட ஞானதேசிகர் கோயில் உள்ளது. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 13 ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் முயற்சியால் கோயில் முன்புறம் பலிபீடம் அருகில் 25 அடி உயர புதிய கொடிமரம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஓதுவார்களின் சிறப்பு பூஜைக்கு பின்னர் கிரேன் உதவியுடன் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பின்னர் மகா தீபாராதனை நடந்தது. திருப்பணி குழு தலைவர் வெங்கடேசன், உபயதாரர் சின்னசாமி ஆசாரி, தொழிலதிபர் ரகோத்தமன் கலந்து கொண்டனர்.