உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசு நிலத்தில் வைத்த சுவாமி சிலை அகற்றம்

அரசு நிலத்தில் வைத்த சுவாமி சிலை அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், அரசு புறம்போக்கு நிலத்தில் வைத்த சுவாமி சிலை அகற்றப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறமுள்ள, அரசு புறம்போக்கு நிலத்தில், கடந்த வாரம் குடிசை அமைத்து, கருப்பசாமி சுவாமி சிலை வைக்கப்பட்டது. இதற்கு, மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, இருதரப்பினரும் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை அகற்ற வருவாய்த்துறை சார்பில், கெடு விதிக்கப்பட்டது. ஆனால், சிலை அகற்றப்படவில்லை. இதையடுத்து, நேற்று அரூர் சப் -கலெக்டர் பிரதாப் முன்னிலையில், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சுவாமி சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !