நஞ்சுண்ட ஞானதேசிகர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
ADDED :2208 days ago
தியாகதுருகம் : தியாகதுருகம் சிவன் கோவிலில் புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. தியாகதுருகம், சந்தைமேட்டில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை நஞ்சுண்ட ஞானதேசிகர் கோவில், புதுப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 13ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் முயற்சியால் கோவில் முன்புற பலி பீடம் அருகே 25 அடி உயர புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டது. இந்த கொடிமரம் நேற்று, ஓதுவார்களின் சிறப்பு பூஜைக்குப் பின்னர் கிரேன் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பின்னர் மகா தீபாராதனை நடந்தது.திருப்பணிக் குழுத் தலைவர் வெங்கடேசன், உபயதாரர் சின்னசாமி, தொழிலதிபர் ரகோத்தமன் பங்கேற்றனர்.