வரசித்தி விநாயகர் கோவில் திருப்பணி
ADDED :2295 days ago
புதுச்சேரி : வரசித்தி விநாயகர் கோவிலில் மூலவர் பீடம் அமைக்கும் திருப்பணி நடந்தது. புதுச்சேரி பாரதி வீதி, நேரு வீதி சந்திப்பில், நெல்லுமண்டி அருகில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு நான்காவது முறையாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது. புதிய கருங்கற்களால் கோவில் எழுப்பப்பட உள்ளது. புதிதாக செதுக்கப்பட்ட கருங்கற்களை கிரேன் மூலமாக கருவறை பீடத்தில் பொருத்தும் திருப்பணி நேற்றுநடந்தது.விழாவில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.,க்கள் சிவா, லட்சுமிநாராயணன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் அப்பாசுவாமி, சம்பந்தம், சவுரிராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.