உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா வைரஸ் தொற்று விலக மிருத்தியுஞ்ஜெய யாகம்

கொரோனா வைரஸ் தொற்று விலக மிருத்தியுஞ்ஜெய யாகம்

 வில்லியனுார் : கொரோனா தொற்று நீங்க, முதல்வர் தலைமையில் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மகா மிருத்தியுஞ்ஜெய யாகம் நடந்தது.

உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்று நோய் நீங்கி, ஆரோக்கியமான வாழ்வு மக்களுக்கு கிடைக்க வேண்டி, திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மகா மிருத்தியுஞ்ஜெய யாகம் நேற்று நடந்தது.புதுச்சேரி வேதபுரி ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் நடந்த இந்த சிறப்பு யாகத்தில் முதல்வர் நாராயணசாமி, முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன், சுகுமாறன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். யாகத்தில், காங்.,பிரமுகர்கள் கண்ணபிரான், செந்தில்குமரன், கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன், கிராம முக்கியஸ்தர்கள் நடராஜன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு யாகத்திற்கான ஏற்பாடுகளை வேதபுரி ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க தலைவர் கணேஷ், துணைத் தலைவர் திருஞானசம்பந்தம், கவுரவ தலைவர் சரவணன், செயலர் லட்சுமிநாராயணன், பொருளார் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !