உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

விளக்கம் தருகிறார் விவேகானந்தர்

* ஒரு செயலில் ஈடுபட்ட பிறகு அதை உலகமே எதிர்த்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி வசமாகும்.
* பலனில் காட்டும் அக்கறையை விட செயலைச் செய்வதில் கூடுதல் அக்கறை காட்டுங்கள்.  
* உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
* எதிலும் மிக உயர்ந்த நிலையும், மிகத் தாழ்ந்த நிலையும் ஒன்று போலவே தோன்றும்.
* துாய்மையானவர்கள், மாசற்றவர்கள் இப்பறவியிலேயே கடவுளைக் காண்கிறார்கள்.
* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தி, துாய்மை, மகிழ்ச்சி நிறைந்திருக்கின்றன.
* மனிதனுக்கு சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக நல்வழி காட்டுகிறது.  
* எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
* செல்வம் பெருகியுள்ள காலத்தில் பணிவும், செல்வம் குறைந்த காலத்தில் துணிவும் அவசியம்.
* சுயநலமில்லாத தன்மை இருந்தால் கடவுளை நாம் தரிசிக்கலாம்.  
* துன்பம் ஏற்பட அறியாமை தவிர வேறெதுவும் காரணமாக அமைவதில்லை.
* சமூகத்தில் அளவுக்கு அதிகமான சட்டங்கள் இருப்பதே அந்தச் சமூகத்தின் அழிவுக்கான அறிகுறி.  
* ஆன்மிகத்தின் அடிப்படை லட்சியமே மனிதனுக்கு அமைதி தருவதுதான்.
* பகைமை, பொறாமையை வெளியிட்டால் அது மீண்டும் வட்டியும், முதலுமாக உங்களிடமே திரும்பும்.  
* சூழ்நிலைக்கேற்றபடி மனிதன் வாழப் பழகினால் அதுவே நிம்மதிக்கான வழிமுறை.
* கீழ்படிதலை அறிந்த ஒருவர் மட்டுமே கட்டளை இடுவதற்கான தகுதியைப் பெறுவார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !