ஸஹாபாக்கள் என்றால் யார்?
ADDED :1962 days ago
அரபி மொழியில் ஸஹாபா என்பது தோழர்கள் எனப் பொருள்படும். இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் என்பது நாயகத்தின் தோழர்களை குறிக்கும். இவர்கள் நபிமார்களுக்கு அடுத்தப்படியான உயர்ந்த அந்தஸ்தில் கருதப்படுகின்றனர். அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, சுபைர், அப்துல் ரஹ்மான் இப்ன் அவ்ப், அபீ வக்காஸ், ஸைத், அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹும் இவர்களின் குறிப்பிடத்தக்கவர்கள். குர்ஆனையும், புனித வார்த்தைகளான அல் ஹதீஸையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுத்தவர்கள் இவர்களே.
‘‘உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை இறை வழியில் செலவு செய்தாலும் நபித்தோழர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது. ஸஹாபாக்களை குறை சொல்வது, அவர்களை ஏசுவது போன்றன பெரும் பாவச் செயல்களாகும்’’