உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்லையும் மதிக்கப் பழகுங்கள்

புல்லையும் மதிக்கப் பழகுங்கள்

சொல்கிறார் அமிர்தானந்தமயி     

* புயல் காற்றில் மரம் சாய்ந்து விடும். ஆனால் புல் சிறிதும் பாதிக்காது. பணிவின் பெருமையை புல்லிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.     
* பணிந்து போவதை பலவீனம் எனக் கருத வேண்டாம். பிறரை வணங்குவதன் பயனாக ஆணவம் மறையும்.       
* இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால் இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது.
* கோயிலில் மட்டும் கடவுளைக் காண்பதில் பயனில்லை. எல்லா உயிர்களிடமும் கடவுள் காண்பதே பக்தி.     
* சுயநலம் கொண்டவரைக் கண்டால் கடவுள் ஆயிரம் அடி விலகிச் செல்வார்.     
* கிணற்றில் விழுவதற்கு ஒரு நிமிடம் கூடத் தேவையில்லை. ஆனால் விழுந்தவன் எழுந்து வர போராட வேண்டியிருக்கும்.  ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு இதுவே.     
* பாய்ந்தோடும் நீரை தேக்கினால் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அது போல ஐம்புலன்கள் வழியே சிதறும் மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுள் அருள் பெறலாம்.       
* இன்றைய நண்பன் நாளை எதிரியாக கூட மாறலாம். நம்பிக்கைக்குரியவரும், அடைக்கலம் என வந்தவரைத் தாங்குபவருமான  ஒரே நண்பன் கடவுள் மட்டுமே.     
* அனுபவம் இன்றி வெறும் சாஸ்திரத்தை மட்டும் படித்து காலம் கழிப்பது கூடாது. வீட்டைக் கட்டாமல், வெறும் கட்டிட வரை படத்தில் யாரும் குடியிருக்க முடியாது.     
* ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் மறைந்து விடும்.
* நல்லதும் கெட்டதும் கலந்தது இந்த உலகம். தேனை மட்டும் சேகரிக்கும் தேனி போல நீங்கள் நல்லதை மட்டும் காண முயலுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !