திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்
ADDED :2274 days ago
திருப்பரங்குன்றம், ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அஸ்தர தேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறப்பு பூஜைகள் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. மலைக்குப்பின்புறம் எழுந்தருளியுள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்து சுந்தர மகாலிங்கம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.