ஜூலை, 26ல் இணையத்தில் சஷ்டி கவசம்
ADDED :1906 days ago
மதுரை : உலகளவில், கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும், இணையவழி கந்தர் சஷ்டி கவசம் மகா பாராயண நிகழ்ச்சி, ஜூலை, 26 மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமையில் நடக்கிறது.
இறைவன் முருகனை புகழும் சக்தி வாய்ந்த இந்த மந்திரம், நோய்களில் இருந்து நம்மை காக்கும் அருமருந்தாக திகழ்கிறது. எனவே, மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, நலம் பெற, http://rebrand.ly/kodiKavacham என்ற இணையதளத்தில் இணையலாம்.கந்த சஷ்டி கவசம் தெரியவில்லை என்றாலும், நிகழ்வில் பங்கேற்று, தியானம் செய்யலாம். அனுமதி இலவசம். பேஸ்புக், யு டியூப் தளங்களில், குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்ற பக்கத்தில், நிகழ்ச்சியை பார்க்கலாம் என, வாழும் கலை மற்றும் வைதீக தர்ம அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.