உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சாஸ்தா கோயில் ஆடிப்பெருக்கு விழா ரத்து

தர்ம சாஸ்தா கோயில் ஆடிப்பெருக்கு விழா ரத்து

ஆண்டிபட்டி: கொரோனா காரணமாக ஆண்டிபட்டி கணவாய் மலை தர்மசாஸ்தா கோயிலில் ஆக. 2 ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹிந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இக்கோயில் கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆண்டிபட்டி கணவாய் மலையில் உள்ளது. வாகனங்களில் செல்லும் பக்தர்கள் சில்லரை காசுகளை காணிக்கையாக போடுவர். பயணம் பாதுகாப்புடன் இருக்க தேங்காய் உடைத்துச்செல்வர்.தர்ம சாஸ்தாவுக்கு ஆடி 18ம் பெருக்கில் விழா எடுப்பர். முதல் நாள் இரவில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி பூஜை செய்வர்.கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் இந்தாண்டு ஆக. 2ல் வரும் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது ,என, செயல் அலுவலர் தங்ககலா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !