நெல்லையப்பர் கோயிலில் அபிஷேக, அலங்காரம்
ADDED :1998 days ago
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் ஜூலை14ல் ஆடிப்பூரவிழா துவங்கியது. ஊரடங்கினால் கொடியேற்றம் இல்லாமல் கோயில் வளாகத்தில் ஆடிப்பூர விழா நடத்தப்படுகிறது. விழாவின் எட்டாம் நாளில், கோயிலின் உள்ளே உற்சவர் மண்டபம் இருப்பிடத்தில் வைத்து அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஜூலை 23 இரவில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாளும், சீமந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.