மனதை வசப்படுத்த நல்வழி..!
ADDED :1939 days ago
இது தவறு என புத்தி சொல்லும் போது மனம் அதை ஏற்றால் மனம் அடங்கியிருப்பதாக பொருள். மீறி தவறு செய்தால் மனம் வசப்படவில்லை என்று பொருள். மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் புத்திக்கு இருப்பது அவசியம். கடவுள் அருள் இருந்தால் இதை அடையலாம். ‘‘அறிவில் இருந்து என்னை நல்வழிப்படுத்த வேண்டும்’’ என தினமும் வழிபாடு செய்யுங்கள்.