கீதை காட்டும் பாதை
ADDED :1938 days ago
ஸ்லோகம்:
யத்ருச்சாலாப ஸந்துஷ்டோ
த்வந்த் வாதீதோ விமத்ஸர:!
ஸம: ஸித்தாவஸித் தெளச
க்ருத்வாபி நநிபத்யதே!!
கதஸங்கஸ்ய முக்தஸ்ய
ஜ்ஞாநாவஸ்தி தசேதஸ:!
யஜ்ஞாயாசரத: கர்ம
ஸமக்ரம் ப்ரவிலீயதே!!
பொருள்:
விருப்பம் இல்லாவிட்டாலும் தானாக கிடைத்த பொருளின் மீது மகிழ்ச்சி கொள்ள வேண்டும். பொறாமமை எண்ணம் கூடாது. மகிழ்ச்சி, துயரத்தில் சிக்கிக் கொள்ளாமல் அதற்கு அப்பாற்பட்டவனாகவும் இருக்க வேண்டும். செயல் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்படுபவனே கர்மயோகி. ஆனால் அவன் செயலுக்கு கட்டுப்பட மாட்டான். உலகப்பற்று, ஆணவத்தை ஒழித்து ஞானத்தில் மனதை நிலைநிறுத்தி செயல்பட்டால் மனிதனது கர்மவினை முழுவதும் அழியும்.