நாளை கந்த சஷ்டி பாராயணம்: 2 கோடி பேர் பங்கு பெற ஏற்பாடு
ADDED :1911 days ago
அருப்புக்கோட்டை,: இணைய தளம் மூலம் 2 கோடி பக்தர்களுடன் இணைந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நாளை சஷ்டி அன்று நடப்பதாக வாழும் கலை அமைப்பின் ஆசிரியை வாசுகி சீனிவாசகம் கூறினார்.
அவர் கூறியதாவது: உடலில் பாதிப்பு இருந்தால் குணமடைய கந்த சஷ்டி கவசம் பாராயணம் உதவி செய்வதை புரிந்து கொள்ளவும் மக்கள் நோயிலிருந்து விடுபடவும் பிரம்மாண்ட ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக இது நடக்கிறது. இதற்கு வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் குருஜி தலைமை வகிக்கிறார். இணைய விரும்புவோர் பேஸ்புக் லைவ் bit.ly/FBKavasam, யூ டியூப் லைவ் bit.ly/YTKavasam முகவரியை டைப் செய்து நுழையலாம். மேலும் விபரங்களுக்கு 97101 01999 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.