உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் களைகட்டிய வளைகாப்பு

அம்மன் கோவில்களில் களைகட்டிய வளைகாப்பு

சென்னை, ஆடிப்பூரத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில், வளைகாப்பு வைபவம் விமரிசையாக நடந்தது.ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திர நாளில், பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல, அம்மனுக்கும் நடத்தப்படுகிறது.

அம்பிகைக்கு  வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு, அந்த வளையல்கள், பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுவது வழக்கம்.ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் இல்லாமல், ஆடிப்பூர விழா நடத்தப்பட்டது.கோடம்பாக்கம், ஆண்டவர் நகர், தேவி கருமாரியம்மன் கோவிலில், ௧.௦௮  லட்சம் வளையல்களால், மூலவர் சன்னிதி அலங்கரிக்கப்பட்டது. உற்சவர், குட்டி கருக்காத்தம்மன் தேவிக்கு, நிறைமாத கர்ப்பிணி வேடமணிந்து, சந்தனக் காப்பு செய்யப்பட்டது. திருமுல்லைவாயில், பச்சையம்மன் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்  நடந்தது. தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த விழா, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.மேலும், மயிலாப்பூர்  முண்டகக்கண்ணிஅம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், பிராட்வே காளிகாம்பாள், மயிலாப்பூர் கோலவிழியம்மன், மடிப்பாக்கம் பொன்னியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஆடிப்பூர விழா விமரிசையாக நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !