உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: துடியலூர், அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளி: துடியலூர், அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

பெ.நா.பாளையம்: துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. துடியலூர் மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ  ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல நரசிம்மநாயக்கன்பாளையம் காமாட்சி  அம்மன் கோவில், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. குறைவான எண்ணிக்கையில், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !