அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர வளையலணி விழா
ADDED :1915 days ago
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர வளையலணி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.உளுந்துார்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்மனுக்கு வலையலணி நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் அதிகமின்றி சமூக இடைவெளியை பின்பற்றி ஆடிப்பூர வளையலணி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், அம்மனுக்கு வளையல் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டன.கோவிலுக்கு பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.