மதுரையில் கல்வெட்டு கோரிக்கை
ADDED :1901 days ago
மதுரை : மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் விசாகனுக்கு அனுப்பிய மனு: கூடலழகர் கோயில் திருப்பல்லாண்டு விழா துவக்கமாக மெய்காட்டும் பொட்டல் (ஜான்சிராணி பூங்கா) இடத்தில் கூடலழகர் கருடாழ்வார், பெரியாழ்வாருடன் எழுந்தருள்வார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுஉள்ள வணிக வளாகம் தவிர மீதமுள்ள இடத்தை நிரந்தரமாக ஒதுக்கி வருங்கால தலைமுறை அறிந்து கொள்ள கல்வெட்டு அமைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.