கொரோனா விலக அதர்வண பத்ரகாளிக்கு அலகு குத்தி வழிபாடு
ADDED :1898 days ago
பல்லடம்: பல்லடத்தை அடுத்த நல்லூர்பாளையத்தில், அதர்வண பத்ரகாளி கோவில் உள்ளது. அங்கு, கொரோனா நோய் தொற்று விலக வேண்டி, பத்ரகாளிக்கு வழிபாடு நடந்தது. முன்னதாக, பத்ரகாளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. கொரோனா நோய் தொற்று விலக வேண்டி, சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது. அதையடுத்து, பக்தர்கள் அலகு குத்தியபடி கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அதர்வண பத்ரகாளி அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.