பக்ரீத் பெருநாளில், சிறப்பு தொழுகை நடத்த அரசுக்கு கோரிக்கை
ADDED :1962 days ago
சென்னை : பக்ரீத் பெருநாளில், சிறப்பு தொழுகை நடத்த, அனுமதிக்க வேண்டும் என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:கர்நாடக மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவை தளர்த்தியும், ஆக., 1 பக்ரீத் தினத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ளவும், கர்நாடக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். மேற்கு வங்க முதல்வரும், ஆக., 1ல் ஊரடங்கை தளர்த்தி, சிறப்பு தொழுகை நடத்த, அனுமதி அளித்துள்ளார்.அதேபோல், தமிழகத்திலும், மசூதிகள் மற்றும் திடல்களில், தனி மனித இடைவெளியுடன், சிறப்பு தொழுகை நடத்த, தமிழக அரசு அனுமதி தர வேண்டும். இவ்வாறு, முஸ்தபா கூறியுள்ளார்.