உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமொழியின் ஆன்மீக அர்த்தம்

பழமொழியின் ஆன்மீக அர்த்தம்

அழுதபிள்ளை பால் குடிக்கும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கு ஆன்மிக அர்த்தமிருக்கிறது. குழந்தை அழுதால், பசிக்கிறது என்று அந்த அழுகை மொழிக்கு அர்த்தம். இதைப் புரிந்து கொள்ளும் தாய் அதற்கு பாலூட்டுவாள். குழந்தையும் அழுகையை நிறுத்தி விடும். இதேபோல, ஆண்டவனிடம், எனது நியாயமான பிரச்னை தீர உன்னருள் வேண்டும், என்று கெஞ்சி பிரார்த்திக்க வேண்டும்.  அந்தக் கெஞ்சலில் சிறிது கூட சுயநலம் இருக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவன் அருள் கிடைக்கும். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி சிவநாமத்தை ஓதினால் நல்லநிலை கிடைக்கும் என்கிறார் ஞான சம்பந்தர். இப்போது புரிகிறதா! இந்த பழமொழிக்குரிய அர்த்தம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !