உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களுக்கு இனிப்பான செய்தி

பெண்களுக்கு இனிப்பான செய்தி

வயிறு சம்பந்தமான நோய்களால் அவதிப்படுவோர் தெரிந்து கொள்ளவேண்டிய பதிகம் ஒன்று தேவாரத்தில் இருக்கிறது. திருநாவுக்கரசரால் பாடப்பட்ட முதல்பதிகம் இது. அவர் சமண சமயத்தில் இருந்தபோது, சூலை நோய் என்னும் வயிற்றுவலியால் துடித்தார். சூலத்தை வயிற்றில் குத்தி திருகியது போன்ற வலியையே சூலை நோய் என்பர். உடனே அவர் வீரட்டானத்துறை சிவாலயத்துக்கு சென்றார். ஐயனே! என்னால் வலி தாங்க முடியவில்லை! என்று அழுதபடியே பாடினார். சிவனருளால் நோய் மறைந்தது.  மாதவிடாய் காலங்களில், சில பெண்கள் இத்தகைய கடுமையான வயிற்றுவலியால் அவதிப்படுவர். வயிறு சம்பந்தமான எந்த பிரச்னைக்கும் உரிய பாடல் இது. சிவபெருமானை மனதில் எண்ணி மாலை வேளையில் தொடர்ந்து பாராயணம் செய்து நலம் பெறுங்கள். கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாது வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !