/
கோயில்கள் செய்திகள் / வழிபாட்டில் பல தெய்வங்களை வணங்குகிறோம். ஒரே கடவுள் இருந்தால் போதாதா? இதற்கான விளக்கம்.
வழிபாட்டில் பல தெய்வங்களை வணங்குகிறோம். ஒரே கடவுள் இருந்தால் போதாதா? இதற்கான விளக்கம்.
ADDED :4940 days ago
கடவுளுக்கென்று உருவமோ, பெயரோ கிடையாது. எல்லையற்றவராக, உருவமற்றவராக அவர் இருக்கிறார். ஆனால், நம் வசதிக்காகவே அவரை ஆயிரமாயிரம் பெயராலும், வடிவத்தாலும் வணங்குகிறோம். தயிர்சாதம், லெமன்சாதம், பொங்கல், புளியோதரை என்று எத்தனை உணவு இருந்தாலும், அத்தனைக்கும் அடிப்படை அரிசி தானே. இந்த உணவைச் சாப்பிட்டால் தான் என் பசியடங்கும் என்று யாரும் சொல்வதில்லை. இந்த உணவை விரும்பிச் சாப்பிடுவேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். எந்த தெய்வத்தை வழிபட்டாலும், பலன் கொடுப்பது அந்த ஒரே இறைசக்தியே. இந்தக் கருத்தை கீதையில் பகவான் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.