வீட்டு வழிபாட்டின் பலன்
ADDED :1900 days ago
குடும்பத்திலுள்ள அனைவரும் தினமும் பூஜை அறையில் அமர்ந்து கூட்டு வழிபாடு நடத்துவது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தபோதும் கடவுள் முன்னிலையில் அனைத்தையும் கொட்டி, வழிபாடு நடத்தும்போது கருத்து வேறுபாடுகள் நிச்சயமாக அகலும். கூட்டு வழிபாடு நடக்கும் வீட்டில் கடாட்சம் உண்டாகும். வாரியார் சுவாமிகள் இதுபற்றி கூறும்போது, வீட்டு வழிபாடு நமக்காக செய்வது. கூட்டு வழிபாடு பிறருக்காக செய்வது. ஆலய வழிபாடு உலகுக்காக செய்வது என்கிறார். கூட்டுவழிபாடு நடத்துவது நமது குடும்பத்திற்காக மட்டுமின்றி, பிறருக்காகவும் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பிறரது நன்மையை கருதும் வழக்கம் நமக்கு ஏற்படுகிறது.