உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை

மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை

திருக்கோவிலூர்:  மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் 14ம் ஆண்டு பால்குட விழா நடந்தது.

மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் 14ம் ஆண்டு பால்குட விழாவை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணிக்கு பக்தர்கள் எடுத்துவந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி, வளைகாப்பு, தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதிக பக்தர்கள் இன்றி தனிமனித இடைவெளியுடன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !