இருக்கன்குடி கோயிலுக்கு ராஜகோபுரம்: ரூ. 63 லட்சம் அனுமதி!
ADDED :4909 days ago
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கான ராஜகோபுர திட்டமதிப்பீடு ரூ. 63 லட்சத்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வந்தது. மதிப்பீட்டு தொகை அதிகமானதால் இதன் பணிகள் பாதித்து, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நின்றது. புதிய திட்டமதிப்பீடு செய்யப்பட்டு, இந்து அறநிலையத்துறை அனுமதிக்கு அனுப்பபட்டது .இதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. செயல் அலுவலர் மற்றும் ஆணையர் எஸ்.மாரிமுத்து, மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணிக்காக ரூ. 63 லட்சம் தேவை என, திட்டமதிப்பீடு செய்யப்பட்டது. இந்து அறநிலையத்துறை அனுமதியளித்துள்ளது. இதன் டெண்டர் அடுத்தமாதம் வெளியிடப்படும், என்றார்.