பழனி ஆண்டவர் கோவிலில் வேல் வழிபாடு
ADDED :1885 days ago
அன்னூர்: சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், வேல் வழிபாடு நடந்தது. சஷ்டி நாளன்று, வீடுகளில், கோவில்களில், வேல் வழிபாடு நடத்தி, கந்த சஷ்டி பாராயணம் செய்யும்படி மடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன்படி சாலையூரில் உள்ள பழமையான பழனியாண்டவர் கோவிலில், காவடி குழு சார்பில், வேல் வழிபாடு நடந்தது. இதில் கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டது. வெற்றிவேல், வீரவேல் என, பக்தர்கள் கோஷம் எழுப்பி வழிபட்டனர். பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வேல் வழிபாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், முருகர் வழிபாடு குறித்தும், ஒவ்வொரு வாரமும் கூடுவதன் அவசியம் குறித்தும் பேசினார். சின்னசாமி சித்தர், பா.ஜ., ஒன்றிய தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.