உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வணங்க அனுமதி

விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வணங்க அனுமதி

 சிவகங்கை: அரசின் கட்டுப்பாடு, நெறிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. ஆக., 22ல் விநாயகர்சதுர்த்தி விழா நடக்கவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. ஹிந்து முன்னணி பொதுச்செயலாளர் அக்னிபாலா, தலைவர் செந்தில்பாண்டி, செயலாளர் கணேசன், துணைத்தலைவர் குணசேகரன் தலைமையில் விநாயகர் வேடமணிந்து கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு கொடுத்தனர். இதில் 144 தடையுத்தரவு உள்ளதை அறிவோம்.

விநாயகர் ஊர்வலம் இல்லை என்பதால், விநாயகர் சிலை வைத்து சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியிருந்தனர். கலெக்டர் ஜெயகாந்தன்,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளி கடைப்பிடித்து விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கியுள்ளார். ஹிந்து முன்னணி பொதுச்செயலாளர் அக்னிபாலா தெரிவித்ததாவது:சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்தாண்டு 257 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது.இந்தாண்டும் அதே எண்ணிக்கையில் 3 அடி உயர விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. அந்தந்த பகுதிகளில் ஆக.22 முதல் 24 வரை சிலை அமைக்கப்பட்டு மக்கள் வணங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் இந்தாண்டு இல்லை, என அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !