உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை

குமாரசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள, நெ.10 முத்துார் வன்னி குமாரசுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன் எழுந்தருளினார்.நெ.10 முத்துார் வன்னி குமாரசுவாமி கோவிலில், நேற்று ஆடி கிருத்திகையை ஒட்டி, கிணத்துக்கடவு கந்த சஷ்டி வழிபாட்டு குழுவினர் சார்பில், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், அரிசி மாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சமூக விலகலுடன், முகக்கவசம் அணிந்து சுவாமியை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !