பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2241 days ago
புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஆடிமாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப் பட்டு, திருத்தேரில் வைத்து கோவிலைச் சுற்றி வலம் வந்தார். இரவு 11.00 மணிக்கு பாலமுருகன், வினாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர், அன்னதானம் வழங்கப்பட்டது.