பூமியில் அவதரிப்பது ஏன்
ADDED :2250 days ago
‘அவதரித்தல்’ என்பதற்கு ‘இறங்குதல்’ என்பது பொருள். வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணு, பூமிக்கு இறங்கி வருவதை அவதாரம் என்பர். விண்ணுலகில் இருந்தே தீயவர்களை அழிக்க முடிந்தாலும், ‘சிஷ்ட பரிபாலனம்’ என்னும் நல்லவரைக் காக்கும் செயலை நேரடியாகச் செய்ய மகாவிஷ்ணு விரும்புகிறார். தர்ம வழியில் தான் வாழ்ந்து காட்டியது போல, மனிதர்களும் தர்மத்தைக் கடைபிடிக்கவும் அவதரிக்கிறார். நல்லவரைக் காத்தல், தீயவரை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டல் என மூன்றையும் நிறைவேற்றுவதே அவதார நோக்கம்.