உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: எதிர்பாராத வருமானம்

விருச்சிகம்: எதிர்பாராத வருமானம்

நல்ல மனம் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!
 சூரியன் சாதகமான இடத்துக்கு வந்துள்ளார். புதன் ஆக.29லும்,  சுக்கிரன் ஆக.31லும் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவர். செவ்வாய், குரு மாதம் முழுவதும் நன்மையளிப்பர். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் உண்டாகாது. முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க அனுகூலம்  உண்டு.
ராகு செப்.1ல் 7ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. தரம் தாழ்ந்தவர்களின் நட்பால் அவப்பெயரைச் சந்திக்கலாம். கேது 2ம் இடமான தனுசு ராசியில் இருந்து பகைவர் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் ஏற்படுத்தி இருப்பார். தொழிலில் அரசின் கெடுபிடியால் பிரச்னை ஏற்படலாம். இந்த நிலையில் கேது செப்.1ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் கெடுபலன் இனி இருக்காது.
குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சகோதரவழியில் உதவி கிடைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும்.
பெண்கள் ஆடம்பர வசதியுடன் வாழ்வர். மனதில் மகிழ்ச்சி நிலவும். கணவர், குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்று குதுாகலம் அடைவர். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப்பெறலாம். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும்.  சுயதொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பெண் காவலர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வர்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறு இருக்கும் இடம் தெரியாமல் மறையும்.
* வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் ஆதாயம் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானம் காண்பர்.
* அரசு பணியாளர்கள் ஆக.31க்கு பிறகு தடைகளை முறியடித்து வெற்றி காண்பர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு சூரியனோடு புதன் சேர்ந்து இருப்பதால் உயர்ந்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு. வேலையில் திருப்தி காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.
* ஐ.டி.,துறையினருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும்.
* மருத்துவர்கள் வேலையில் திருப்தியும் நிறைவும் பெறுவர். யாருடைய உதவியும் நாடாமல் தானே காரியத்தை சாதிக்கும் பலம் உண்டாகும்.
* வக்கீல்களுக்கு எதிர்பாராத வகையில் வருமானம் உயரும்.  மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
* ஆசிரியர்கள் பணியில் மேன்மை காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள்  சரணடையும் நிலை வரலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும்.  திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். பொருளாதார வளத்தில் குறை இருக்காது. பொதுநல சேவகர்கள் நன்மை காண்பர். விரும்பிய பதவி கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  புகழ்,  பாராட்டும் கிடைக்க பெறுவர்.
* விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். பழ வகைகள், கீரை வகைகளில் வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம். பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர். கால்நடை வளர்ப்பில் வளர்ச்சி ஏற்படும்.  
* மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
   
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஆக.31 வரை  அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகள் ஆக.31 க்கு பிறகு  தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே நட்பு விஷயத்தில்  எச்சரிக்கை தேவை.
* தரகு,கமிஷன் தொழிலில் பொருளாதார இழப்பு ஏற்படலாம். யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.  
நல்ல நாள் ஆகஸ்டு 19,20,21,22,26,27,30,31 செப்டம்பர் 6,7,8,9,10,16.
கவன நாள்: செப்.11,12 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்:
* சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசிமாலை
* வெள்ளியன்று காளியம்மனுக்கு நெய் தீபம்
* சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு எள் விளக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !