உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலம் மிக்க மந்திரம் ராம நாமம்

பலம் மிக்க மந்திரம் ராம நாமம்

* ராம நாமத்தில் நம்பிக்கை கொண்ட அனுமன் கடலை கடந்தார். ஆனால் ராமனோ பாலம் கட்ட வேண்டியிருந்தது.
* அநியாயம், பொய்யை எதிர்த்து நிற்காமல் சும்மா இருப்பது அறியாமை.      
* கடவுளை ஆராய்ச்சி செய்யாதே.  நம்பிக்கையுடன் சரணடை.       
* விவேகம் இல்லாவிட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகாது.      
* கடவுளின் அருள் இருந்தால் அறியாமையில் இருந்து விடுபடலாம்.        
* விழிப்புடன் இருந்தால் தீய எண்ணம் வராது.
* எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை.
* இளமைக் காலமே ஆன்மிகத் தேடலுக்கு ஏற்றது.
* உலக ஆசைகளில் இருந்து கொண்டே மனதை அடக்கியாள்பவனே உண்மை வீரன்.
* மற்றவர் குறைகளை பற்றி பேசுபவன் நேரத்தை வீணாக்குகிறான்.
* உனக்குள் கடவுள் இருக்கிறார். அவரை வெளியில் தேடாதே.
* உன்னை நேசி. மற்றவர் மீது வெறுப்பு வேண்டாம்.
* பெருமை அடைய விரும்பினால் அடக்கத்தோடும், பணிவோடும் இரு.
* எப்போதும் பயனுள்ள பணியில் ஈடுபடு.              
* பெருமை பேசுவதில் பயனில்லை. உன்னிலும் சிறந்தவர் பலர் இருக்கிறார்கள்.             
* விடாமுயற்சி உள்ளவனுக்கு எல்லாம் சாத்தியம். அது இல்லாதவனுக்கு ஒன்றும் கிடைக்காது.           


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !