வாழ்க வையகம் என வாழ்த்துங்கள்
* காலையில் எழுந்தவுடன் ‘வாழ்க வையகம்’ என வாழ்த்துங்கள்.
* ஒரு செடியை வாழ்த்தலாம். அதன் மூலம் செடியின் பலவீனம் நீங்கும்.
* ஆசையை சீர்படுத்தினால் வாழ்வு ஆனந்தமாகும்.
* கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது.
* மனதில் கருணை, உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் கொண்டவரே நல்லவர்.
* கடமையில் ஈடுபாடு இருந்தால் உன் உரிமையும், நலனும் பாதுகாக்கப்படும்.
* உள்ளத்தில் உறுதி, செயலில் ஒழுக்கம் இருந்தால் குறிக்கோளை அடையலாம்.
* இன்பத்தை விட துன்பத்தில் கிடைக்கும் அனுபவம் மதிப்பு மிக்கது.
* ஆசையை அடக்காமல் அறிய முயன்றால் அது கட்டுப்படும்.
* உழைப்பால் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது.
* உண்மையும், நேர்மையும் துன்பத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.
* அன்பு, அருள், இன்முகம் கொண்ட நல்லவர்களின் படங்களை வீட்டில் வையுங்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
* தனி மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் சமுதாயம் மகிழ்ச்சியாக வாழும்.
* நற்செயலில் ஈடுபடுவதால் கிடைக்கும் மனநிறைவே நிஜமான மகிழ்ச்சி.
* கடமை தவறாதவர்களால் கடவுள் மீது பக்தி செலுத்த முடியும்.
* இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தலாம். .
* தேவையான சூழ்நிலையில் கோபம் கொண்டது போல நடிக்கலாம்.
* எந்த நிலையிலும் கோபம் வராவிட்டால் அவர் ஞானம் பெற்றதாகப் பொருள்.